Tamil Cinema News | சினிமா செய்திகள்
சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில் போஸ்டர்.. இப்படியெல்லமா பெயர் வைப்பார்கள்
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் டைரக்டர் சசி. லிவிங்ஸ்டன் வைத்து ஹிட் கொடுத்த டைரக்டர் கதையை மட்டுமே ஹீரோவாக நம்பி படம் எடுப்பவர்.

டைரக்டர் சசி
தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் டைரக்டர் சசி. லிவிங்ஸ்டன் வைத்து ஹிட் கொடுத்த டைரக்டர் கதையை மட்டுமே ஹீரோவாக நம்பி படம் எடுப்பவர். சொல்லாமலே முதல் பிச்சைக்காரன் வரை அவருடைய படங்கள் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர்.
அக்கா, தம்பி பற்றின ஒரு பாச கதையை மையப்படுத்தி அவர் எடுக்கும் அடுத்த படம் விரைவில் தொடங்க இருக்கிறது. சித்தார்த் – ஜி.வி.பிரகாஷை வைத்து எடுக்கும் படத்திற்கு முதலில் `ரெட்ட கொம்பு’ என பெயர் வைத்தனர்.
இப்பொழுது சிவப்பு மஞ்சள் பச்சை என்று மாற்றியுள்ளனர். இதனைப் பற்றி டைரக்டர் சசி பேசும்பொழுது;
“அனைவரும் தங்கள் நிஜவாழ்க்கையை உணரும் வகையில், இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. அக்காவாக, மலையாள திரையுலகின் முன்னணி நடிகை லிஜோமோள் நடிக்கிறார். தமிழில் அறிமுகமாகும் முதல் படம். இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்”.
இந்தப் படத்தில் சித்தார்த் டிராபிக் போலீஸ் ஆபிஸராக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் பைக் ரேசர் ஆக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் காஷ்மீரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
