Tamil Cinema News | சினிமா செய்திகள்
8 வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன்.. நெகிழும் சித்தார்த்.

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். இவருக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம். ஒரு கட்டத்தில் தமிழை விட தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தார். ஆனால், அங்கிருந்த சினிமா அரசியல் காரணமாக தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சித்தார்த் படங்களில் நடிப்பதை தவிர்த்து அவ்வபோது சோசியல் மீடியாவில் அரசியல்வாதிகளை விமர்சனம் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இறுதியாக இவர் நடிப்பு சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம் உள்ளிட்ட படங்கள் 2019ல் வெளியானது. அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் இவரது அறிமுகப் படமான கம்மார சம்பவம் படமும் சுமாராகவே போனது. தற்போது சித்தார்த் நடித்துள்ள டக்கர், சைத்தான் கி பச்சா படங்கள் முடிந்தும் வெளியாகாமல் உள்ளன. அதேபோல் அவர் நடிப்பதாக இருந்த இந்தியன் 2 திரைப்படம் பாதியில் நிற்கிறது.
இந்நிலையில்தான், சர்வானந்துடன் தெலுங்கில் மகா சமுத்திரம் என்ற படத்தில் சித்தார்த் நடித்து முடித்துள்ளார். அஜய் பூபதி இயக்கியுள்ள இப்படத்தை ஏகே என்டர்டெயின்மெண்ட்ஸ் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ளது . அதிதி ராவ் ஹிதாரி, அனு இம்மானுவல் நாயகிகளாக நடித்துள்ளனர். ஆகஸ்ட் 19ஆம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

maha samudram
மகா சமுத்திரம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள சித்தார்த், “8 வருடங்களுக்கு பிறகு எனது தெலுங்கு சினிமா ரசிகர்களை சந்திக்க உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
