விளம்பரப்படங்கள் எடுத்துள்ள  ரதீஸ் ஆம்பட் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்  திலீப் அவர்களுடன் நம் சித்தார்த் இணைந்து நடிக்கும் படம் ‘கம்மாரசம்பவம்’.

Kammara Sambhavam

இது சித்தரத்தின் முதல் மலையாளப் படம்.

KammaraSambhavam

இப்படத்தில் கம்மாரன் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் திலீப் நடித்துள்ளார். படத்தில் திலீப்புக்கும், சித்தார்த்துக்கும் சமமான முக்கியத்துவம் உள்ளதாம்.

Dileep as Kammaran

கேரளாவில் உள்ள  கம்யூனிஸ்ட் விஷயங்களை  மையப்படுத்தி சூப்பர் நாட்டுரல் ட்ராமா ஜானரில்  இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே படத்தின் டைட்டில் போஸ்டர், நடிகர் திலீப்பின் லுக்  வெளியான நிலையில் இப்பொழுது சித்தார்த்தின் லுக் வெளியாகி உள்ளது.

Kammarsambham

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஏற்கனவே நம் ஊர் பரத், ஆர்யா, விஷால் போன்றோர் மலையாளப் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்பொழுது சித்தார்த்தும் மாலிவூட்டில்  நுழைந்துள்ளார்.    இதற்க்கு முன்னரே ‘உஸ்தாத் ஓட்டல்’ என்ற மலையாளப் படத்தில், கால்ஷீட் பிரச்னையால் சித்தார்த் நடிக்க வேண்டியது. கால்- ஷீட் பிரச்சனையால் அவர் நடிக்க முடியவில்லையாம் . இதையடுத்து இந்தப் படத்தின் மூலம் மலையாளத்தில் அவர் அறிமுகமாகிறார்.