பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளபட 14 பேரும் விடுதலை செய்யப்பட்டன சிபிஐ போதிய ஆதாரம் சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று காலை முதலே இந்த தீர்ப்பால் பலரும் சமூக வலை தளங்களில் தங்கள்  கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில் இதுகுறித்து தன் ட்விட்டர்  பக்கத்தில் நடிகர் சித்தார்த்…

அதிகம் படித்தவை:  10 லட்சம் லைக்குகளை கடந்த சுந்தர் சி பட நடிகையின் பிகினி புகைப்படம்.!

“சூப்பர் ஹிட் ரிப்போர்ட். அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. உன்னதமான  இந்திய அரசியலுக்கு  வாழ்த்துக்கள். மிகவும் நல்ல விஷயம்.  இனி 2ஜி கிடையாது. ப்ளீஸ்  தேசிய கீதத்திற்கு எழுந்து நில்லுங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

2ஜி வழக்கின் தீர்ப்பு தொடர்பாக, நடிகர் சித்தார்த் போட்ட ட்வீட்  சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. ஒரு புறம் இவர் மனதில் பட்டத்தை சொன்னாலும், மறுபுறம் இந்தியா மற்றும் தேசிய கீதத்தை இவர் அவமதிப்பது போல் கருத்து சொல்லியதால் கடுப்பில் உள்ளனர் நம் நெட்டிசன்கள்.