Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வாழ்க்கை ஒரு வட்டம் ! தல அஜித் பற்றிய சவரஸ்யமான தகவலை பகிர்ந்த பாடகர் சித் ஸ்ரீராம்.

தமிழ் சினிமாவின் வைரல் வாய்ஸுக்குச் சொந்தக்காரர் சித் ஸ்ரீராம். `கடல்’ படத்தின் ‘அடியே… அடியே…. என்ன எங்க நீ கூட்டிப்போற…’ பாடல் மூலம் என்ட்ரி கொடுத்தவர். இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அசத்துபவர்.

சென்னையில் பிறந்தவர் தான் என்றாலும், இவருக்கு ஒரு வயது இறந்த பொழுதே அமெரிக்க சென்று செட்டில் ஆன குடும்பம். அம்மா கர்னாடிக் பாட்டுக்கள் என்பதால், சிறு வயதில் இருந்து இவரும் பாடுவதில் அசத்தியவர். இசைக்கல்லூரியில் படித்து முடிந்ததன் பின், மனிதர் டிசம்பரில் மார்கழி உட்சவதில் பங்கேற்க வருபவர்.

Sid Sriram D Imaan Thamarai

தமிழில் ‘ஐ’ பட ‘என்னோடு நீ இருந்தால்…’, `நானும் ரெளடிதான்’ பட ‘எனை மாற்றும் காதலே…’ , அச்சம் என்பது மடமையடா பட ‘தள்ளிப்போகாதே’ , எனை நோக்கி பாயும் தோட்டா பட ‘மறுவார்த்தை பேசாதே’ என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

விஸ்வாசம்

நேற்று இமான் இசையமைத்திருக்கும் தல அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியானது. இந்தப் பாடல்களில், தாமரை எழுதியுள்ள ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலைப் பாடியுள்ளார், சித் ஸ்ரீராம். வெளியான சில நிமிடங்களில் இப்பாடல் டெரெண்டிங் ஆனது.

track list viswasam

இந்நிலையில் அஜித் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை ட்விட்டரில் ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.

” கண்ணான கண்ணே எனக்கு மிகவும் ஸ்பெஷலான பாடல். எனக்கு 8 வயது இருக்கும் பொழுது பெசன்ட் நகரில் இருக்கும் எங்கள் தாத்தாவின் வீட்டின் முன் . அஜித் சார் ஷூட்டிங் நடந்தது. ஜன்னலின் வழியே அதைப் பார்த்து நானும், எனது குடும்பத்தினரும் உற்சாகம் தாளாமல் கூச்சலிட்டுக்கொண்டிருந்தோம். இதைப் பார்த்த அவர், எங்களைக் கீழே வந்து போட்டோ எடுத்துக்கொள்ளுமாறு சைகைகாட்டினார். தற்பொழுது வாழ்க்கை முழு வட்டத்தை நிறைவு செய்வது போன்ற உணர்வு ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top