சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில்; சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, நிழல்கள் ரவி, சதீஷ், ஆனந்தராஜ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ’சத்யா’ . ஸ்பென்ஸ் த்ரில்லர் படமான சத்யா தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘க்ஷணம்’ படத்தின் ரீ-மேக் என்பது நாம் அறிந்த விஷயமே. அந்த ரீ மேக்கில் படக்குழு வெற்றி பெற்றதா என்று பார்ப்போம்.

கதை

சிபிராஜ்  வெளிநாட்டில் ஆன்- சைட்டில் வேலை செய்பவர். அவரின் முன்னால் காதலி ரம்யா நம்பீசனிடம்  இருந்து போன் வருகிறது. இந்திய விரைகிறார். ரம்யா தன் குழந்தை கடத்தப்பட்டு, இரண்டு மாதம் ஆகிறது கண்டுபிடித்து கொடு என்று கேட்கிறார். சதீஷிடம் வாடகை கார் எடுத்து தேடுகிறார். வழக்கமான தமிழ் சினிமா பாணியில்  இடையிடை அவர்களின் பழைய காதல் காட்சிகள் பிளாஷ் பாக்கில் வந்து செல்கிறது.

அதிகம் படித்தவை:  ரஹ்மானுக்கு வீடியோ கால் செய்த, பிரபல இசையமைப்பாளரின் ஒரு வயது மகள். ட்விட்டர் வைரல்.

sibiraj

தேடுதலில் இறங்கிய சிபிராஜுக்கு ஏமாற்றமே கிடைக்கிறது. ரம்யா நம்பீசன் சொல்வது போல்  குழந்தை உண்மையில் இருந்ததா இல்லையா ? மற்றவர்கள் சொல்லுவது போல குழந்தை கிடையாதா ? என்று வேகம் பிடிக்கிறது திரைக்கதை. சஸ்பென்ஸ் அதிகரிக்கும் வேலையில் பட்டென்று இன்டெர்வல், அதுவும் எதிர்பார்க்காத ட்விஸ்டுடன்.

பின்னர் இரண்டாம் பாதியில் ஆனந்தராஜ், வரலக்ஷ்மி சரத்குமார் ( அசிஸ்டன்ட் கமிஷனர்), சிபிராஜ், சதிஷ்  என்று மிக விறு  விறுப்பாக கதை நகர்கிறது. இறுதியில் வரும் கிளைமாக்ஸ்  ட்விஸ்டின் உச்சம்.

பிளஸ்

கதை, திரைக்கதை, பின்னணி இசை, வரலக்ஷ்மி சரத்குமார்

மைனஸ்

அடிக்கடி வரும் மொக்கை ஜோக்குகள், வழக்கமான காதல் பிளாஷ் பேக், போலீசை இவ்வளவு மொக்கையாக சித்தரித்தது.

சினிமாபேட்டை கருத்து

ஆகமொத்தத்தில் ரொம்ப நாள் கழித்து நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் பார்த்த அனுபவம் கிடைக்கும். சதீஷ் காமெடியை விட குணச்சித்திர கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். ஆனந்த்ராஜ் கதாப்பாத்திரத்தின் ஸ்டைல், வசனங்கள் அருமை. சில நேரங்களில் அட நம்ம சத்யராஜே இதை நடித்து இருக்கலாமே என்று தோன்றுகிறது.

அதிகம் படித்தவை:  Madhan Karky Speech at WE Awards

பின்னணி இசை சைமன். 555 படத்திற்கு பின் நீண்ட இடைவெளி என்றாலும்   ஹாலிவுட் பட ஸ்டைலில் அசத்திவிட்டார்.  இயக்குனர் பிரதீப் க்ரிஷ்ணமுர்த்தி குறைந்த பட்ஜெட்டில் படத்தை  மிக ரிச்சாக எடுத்துள்ளார்.

சினிமாபேட்டை ரேட்டிங்: 3.25 /5

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

சிபிராஜ்  நாயை வைச்சு தானே ஹிட் கொடுத்தார், பேயை வைச்சோ மீனை வைத்தோ ஹிட் குடுக்க முடியலையே என்ற பேச்சு கோடம்பாக்கத்தில் நிலவி வரும்  சூழலில், சிபிராஜ் இந்த படம் மூலம் தன்னை நிரூபித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் சிபிராஜ்