fbpx
Connect with us

வனத்துறை அதிகாரியாக சிபிராஜ். வெளியானது டைட்டில், பர்ஸ்ட் லுக் -புலி வேட்டை ஆரம்பம் 

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வனத்துறை அதிகாரியாக சிபிராஜ். வெளியானது டைட்டில், பர்ஸ்ட் லுக் -புலி வேட்டை ஆரம்பம் 

உண்மை கதையை மையமாக கொண்டு ரெடியாகும் சிபிராஜின் அடுத்த படம் ரேஞ்சர். பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய P V தரணீதரன் இப்படத்தை இயக்குகிறார்.  அரோலி கரோலி இசை. ஒளிப்பதிவு கல்யாண் வெங்கட்ராமன். எடிட்டிங் சிவா நந்தீஸ்வரன்.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இப்படத்தின் டைட்டில் லுக் நேற்று வெளியானது.

sibiraj in ranger title look poster

கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் 13 மனிதர்களை கொண்ட அவ்னி என்ற பெண் புலிக்காக பாரஸ்ட் டிபார்ட்மென்ட் பெரிய வேட்டை நடத்தியது. அதனை மையப்படுத்தியே இப்படம் எடுக்கப்படுவதாக சொல்கின்றனர். தனது இரண்டு குட்டிகளை காப்பாற்ற போராடியது அந்த புலி. நவாப் அஸ்கர் அலி கான் என்பவர் அதனை சுட்டு வீழ்த்தினார். ஒருபுறம் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு மறுபுறம் கிராம மக்களின் ஆதரவு என பல சர்ச்சை நிறைந்த வேட்டை சம்பவம் அது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top