நடிகர் சிபிராஜ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சத்யா படத்தில் நடித்து வருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடித்த சைத்தான் படத்தை இயக்கியவர். சத்யா படத்தில் ரம்யா நம்பீசன், வரலட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் லிப் லாக் முத்தக்காட்சி ஒன்று இருக்கிறதாம். இதில் சிபியை நடிக்க சொல்லி இயக்குனர் காட்சியை விளக்கி சொன்னாராம். ஆனால் எவ்வளவோ அவர் சொல்லியும் சிபி மறுத்து விட்டாராம்.

காரணம் படம் வெளிவந்த பிறகு சிபியின் மகன் அதை தியேட்டரில் பார்த்தால் நன்றாக இருக்காது என்பது தானாம். மேலும் இப்படத்தின் கதையே காணாமல் போன குழந்தையை கண்டுபிடிப்பது தானாம்.