Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரும்புத்திரை ஸ்டைலில் உருவாகிறதா சிபி ராஜின் அடுத்த படம் ?
Published on

சிபிராஜ்
கதை மற்றும் கதாபாத்திர தேர்வில், அதிக கவனம் செலுத்தி வருகிறார் சிபிராஜ். பட எண்ணிக்கையை விட தரத்தின் மீது தான் இவரின் நம்பிக்கை. சத்யா படத்தினை தொடர்ந்து ரங்கா படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இப்படத்தின் பணிகள் முடிய உள்ள நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டெக்னோ த்ரில்லர் ஜானர் படமாம் இது. இதனை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கவுள்ளார். பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்துவருகின்றதாம்.
‘Learn and Teach’ என்ற நிறுவனம் சார்பில் சாய் தேவனாந்த படத்தை தயாரிக்கிறார். செப்டெம்பரில் ஷூட்டிங் துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
