fbpx
Connect with us

நேற்று கமல், இன்று ரஜினி! சிபிராஜின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர்.

News / செய்திகள்

நேற்று கமல், இன்று ரஜினி! சிபிராஜின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர்.

கமல் பட தலைப்பான ‘சத்யா’ வை தொடர்ந்து, தன் புது படத்திற்கு ரஜினி படத்தின் தலைப்பை, தன்னுடைய படத்துக்கு வைத்துள்ளார் சிபிராஜ்.

1982ஆம் ஆண்டு ரஜினி,ராதிகா,கே.ஆர்.விஜயா, சில்க் ஸ்மிதா நடிப்பில், ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் வெளியான படம் ரங்கா.

இந்தப் படத்தை, வினோத் இயக்குகிறார். வினோத் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். ‘வெற்றிவேல்’, ‘கிடாரி’ படங்களில் சசிகுமார் ஜோடியாக நடித்த நிகிலா விமல் , இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிபிராஜ் தன் ட்விட்டரில் வெளியிட்டார்.

கமல் நடித்த ‘சத்யா’ படத்தலைப்பை கைப்பற்றி அதற்கு பெருமை சேர்த்த சிபிராஜ், அடுத்ததாக ரஜினி படத்தின் தலைப்பை கைப்பற்றியுள்ளார்.

வாழ்த்துக்கள் சிபி .

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top