Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனத்துறை அதிகாரியாக சிபிராஜ்! லைக்ஸ் குவிக்குது பர்ஸ்ட் லுக்- புலி வேட்டை ஆரம்பம்
ரேஞ்சர் – பர்மா, ஜாக்சன் துரை, ராஜா ரங்குஸ்கி ஆகிய திரைப்படங்களை இயக்கிய P V தரணீதரன் இப்படத்தை இயக்குகிறார். அரோலி கரோலி இசை. ஒளிப்பதிவு கல்யாண் வெங்கட்ராமன். எடிட்டிங் சிவா நந்தீஸ்வரன். ஆரா சினிமாஸ் மற்றும் நியூ ஏஜ் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம்.

sibiraj as forest ranger
இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், மதுஷாலினி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் சிபிராஜுடன் நடித்துள்ளனர். உண்மை கதையை மையமாக கொண்டு ரெடியாகும் படம் இது. ‘ரேஞ்சர்’ படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.
2018 இல் மகாராஷ்டிர மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் 13 மனிதர்களை அடித்து கொன்ற அவ்னி என்ற பெண் புலிக்காக பாரஸ்ட் டிபார்ட்மென்ட் பெரிய வேட்டை நடத்தியது. அதனை மையப்படுத்தியே இப்படம். தனது இரண்டு குட்டிகளை காப்பாற்ற என போராடியது அந்த புலி. நவாப் அஸ்கர் அலி கான் என்பவர் தன் தற்காப்புக்காக அதனை சுட்டு வீழ்த்தினார்.

ranger sibiraj
ஒருபுறம் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பு மறுபுறம் கிராம மக்களின் ஆதரவு என பல சர்ச்சை நிறைந்த வேட்டை சம்பவம் அது.
