தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரஜினியை தான் பிரபலங்கள் குறி வைத்து வருகின்றனர்.

ஜாக்சன் துரை மற்றும் கட்டப்பாவ காணோம் ஆகிய படங்கள் நடிகர் சிபிராஜ்க்கு ஹிட் கொடுத்து போதுமான பாக்ஸ் ஆபிஸ் வசூல் கொடுத்தது. இப்படங்களைத் தொடர்ந்து தற்போது நிகிலா விமல் உடன் இணைந்து ரங்கா படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். த்ரில்லர் கலந்த இப்படத்தை வி.இசட்.துரையின் உதவியாளர் வினோத் இயக்குகிறார். பாஸ் ஃபிலிம்ஸ் விஜய் கே.செல்லையா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் படமாக்கப்படயிருக்கிறது.

அதிகம் படித்தவை:  2.0 படத்தின் முக்கியமான விஷயத்தை கசியவிட்ட நடிகர்- கோபத்தில் ஷங்கர்

இந்நிலையில், காக்கும் கடவுள் ரங்கநாதரை போல தன்னை சுற்றி இருப்பவர்களை கஷ்டங்களையும், தாண்டி காக்கும் ஒரு சாதாரண மனிதன் தான் இந்த படத்தின் ஹீரோ ரங்கா. இப்படத்தில் இதுவரை பார்த்திராத சிபிராஜை பார்ப்பீர்கள். அதற்கு நான் கேரண்டி என்று நம்பிக்கையோடு இயக்குனர் வினோத் தெரிவித்துள்ளார்.

அதிகம் படித்தவை:  தமிழ் நாட்டின் அவல நிலையை விவரிக்கும் பிளாக் vs வயட் வீடியோ, காலா ரஜினி feat வெர்ஷன்.

ரங்காவுக்கு முன்பாக கமல்ஹாசன் நடித்த சத்யா பட தலைப்பை சூட்டியுள்ளனர். ஆனால், ஏதோ காரணத்தால் இப்படத்தின் தலைப்பிற்கு பதிலாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிளாக்பஸ்டர் படமான ரங்கா பட தலைப்பை இப்படத்திற்கும் சூட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.