கெட்ட வார்த்தையில் இணையத்தை தெரிக்கவிட்ட ஆண்ட்ரியா.. சிபிராஜின் அடுத்த அவதாரம் எப்படி இருக்கு?

சிபிராஜின் நடிப்பில் கடந்த மாதம் மாயோன் திரைப்படம் வெளியாகி பல பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது அவரின் நடிப்பில் வட்டம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கமலக்கண்ணன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

மேலும் இப்படத்தில் சிபிராஜுடன் இணைந்து ஆண்ட்ரியா, அதுல்யா ரவி, பால சரவணன், சைத்ரா ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.

டிரெய்லரின் ஆரம்பமே சிபிராஜ் மிகவும் சோகமாக இருப்பது போன்று தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து அவருக்கு பெண்களால் ஏற்பட்ட பாதிப்பும், அதனால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளையும் ஆக்ஷன் கலந்த திரில்லராக சொல்லப்பட்டுள்ளது.

அதிலும் இந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் இப்படி இருக்காங்க, உண்மையான காதலை விட பணம் ஏன் பெருசா தெரியணும், பெரிய இரும்பு கதவை திறக்க பலம் தேவையில்லை சின்ன சாவி இருந்தால் போதும் போன்ற வசனங்கள் ரசிக்கும் வகையில் இருக்கிறது.

அதைத்தொடர்ந்து வெவ்வேறு பிரச்சனைகளில் இருக்கும் மனிதர்கள் ஒரு வட்டத்திற்குள் சந்திக்கும் பொழுது ஏற்படும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதை. அந்த வகையில் ட்ரைலரின் பல இடங்களில் கார், பைக் சேஞ்சிங், சண்டை காட்சிகள், போலீஸ் என்று படு மிரட்டலாக இருக்கிறது.

சிபிராஜுக்கு அடுத்தபடியாக ஆண்ட்ரியாவுக்கு இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்பது அவருடைய வசனங்கள் மூலம் தெரிகிறது. அந்த வகையில் வரும் 29ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.