மாயோன்

சிபி சத்தியராஜ் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வந்துள்ளது. இப்படத்தில் பண்டைய கோயிலின் மர்மத்தை தேடி தேடி செல்லும் தொல்லியல் குழுவின் பயணத்தை நாம் பார்ப்போம் என்று மோஷன் போஸ்டரில் தெரிவித்துள்ளனர்.

கிஷோர் இப்படத்தை எழுதி இயக்குகிறார். இளையராஜா இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனிக்கிறார். இப்படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. கிராபிக்சில் மோஷன் போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளனர்.