சிபி கிட்ட இருக்க ஒரே கெட்ட விஷயம் இதுதான்.. திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரே வாரத்தில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். ஆகையால் போட்டி கடுமையாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வீட்டில் இருக்கும் ஆறு போட்டியாளர்களுள் சிபி தற்போது 12 லட்சத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இவர் எடுத்த இந்த திடீர் முடிவு ரசிகர்கள் சிலரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் இது புத்திசாலித்தனமான முடிவு என்று ஒத்துக் கொள்கின்றனர். இருப்பினும் சிபிக்கு எந்த ஒரு செயலை எடுத்தாலும் அதற்கு விரைவில் முடிவு கிடைத்துவிட வேண்டும் என்ற குணம் உடையவர். இதை அவ்வப்போது அவர் பிக் பாஸ் வீட்டில் கூறியிருக்கிறார்.

இருப்பினும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் மூலம் அது தெளிவாக தெரிந்தது. ஏனென்றால் அமீர் மற்றும் சிபி இடையே நடந்த போட்டியின்போது போட்டிக்கு விரைவில் முடிவு காண வேண்டும் என்றே சிபி டிக்கெட்டு ஃபினாலே டாக்கில் தோற்றார். அதை அவர் வாயாலேயே ஒத்தும் கொண்டது.

தற்போது அவ்வாறு தான் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் வெற்றி பெற முடியாது என்று அவரை அவரே நம்பாமல் அவருடைய போட்டியில் தன்னுடைய நிலைமை என்ன என்பதை விரைவில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இனி போட்டியை தொடர வேண்டாம் என்று 12,00000 லட்ச பணப்பெட்டியை எடுத்துவிட்டார்.

இது சரியான முடிவுதான். ஏனென்றால் சென்ற வாரம் கடைசியாக காப்பாற்றப்பட்ட சிபி இந்தவாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றதால் எலிமினேட் ஆவதற்கு வாய்ப்பிருப்பதால் 12 லட்சம் போதும் என்று இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளார். அத்துடன் பிக் பாஸ் வீட்டில் இவருடைய நேர்மையான பேச்சு மற்றும் விளையாட்டை ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமலஹாசனும் புகழ்ந்துள்ளனர்.

குறிப்பாக வார்டன் டாஸ்க் மற்றும் ரங்கிங் டாஸ்கின் போது சிபி தன்னை சிறந்த போட்டியாளராக நிரூபித்தார். இருப்பினும் சிபியிடம் இருக்கும் ஒரே மைனஸ் என்னவென்றால் எந்த விஷயத்திற்கும் சீக்கிரம் முடிவு வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்று ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிபி சிறந்த மனிதன் என்ற பெயருடன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் எனவே பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே சென்ற சிபிக்கு சினிமாவில் எக்கச்சக்கமான பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்