இந்த ஒரே படத்தினால் அசுர வளர்ச்சியில் சிவகார்த்திகேயன்.. மொத்த வசூலை கேட்டு தலை சுற்றிய முதலாளி

ஒரு சாதாரண தொகுப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் எட்டியுள்ள உயரம் மிகப்பெரியது. இந்த இடத்தை அவர் அவ்வளவு எளிதில் அடைந்து விடவில்லை என்பது தான் உண்மை. பல போராட்டங்கள், கஷ்டங்களை தாண்டியே இந்த நிலையை அடைந்துள்ளார்.

மெரினா படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பிரபலமானார். இந்த படம் சிவகார்த்திகேயன் திரைவாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.

தொடர்ந்து ரஜினி முருகன், வேலைக்காரன், ஹீரோ, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதோடு எஸ்.கே.புரொடெக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களையும் தயாரித்துள்ளார். ஆனால் அதுவே அவருக்கு பெரிய பிரச்சனையாக உருவானது. இவர் தயாரிப்பில் வெளிவந்த படங்களின் தோல்வி காரணமாக மிகப்பெரிய கடன் பிரச்சனையில் சிக்கி விட்டார்.

இப்படி ஒரு நிலையில் தான் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில் டாக்டர் படம் முதல் நாளே 8 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகரின் படத்திற்கு இந்த அளவு வரவேற்பா என கோலிவுட்டே வாயை பிளந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் திரை வரலாற்றிலேயே அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற சாதனையை டாக்டர் படம் பெற்றுள்ளது. ஆம் உலகம் முழுவதும் திரையிடப்பட்ட டாக்டர் படம் சுமார் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளார்கள். முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படம் 86 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

doctor-cinemapettai
doctor-cinemapettai

தற்போது டாக்டர் படம் தமிழகத்தில் 60 கோடியும், உலகம் முழுவதும் 90 கோடியும் வசூல் செய்துள்ளது. இதுதவிர தற்போது கேரளாவிலும் டாக்டர் படத்தை வெளியிட்டுள்ளார்களாம். எனவே எப்படியும் 100 கோடியை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக உயர்ந்து விட்டார்.

மொத்த வசூலை கேட்டு தயாரிப்பாளர் பெரும் மகிழ்ச்சியில் தலை கால் புரியாமல் ஆடி வருகிறாராம்.  சிவகார்த்திகேயனுக்கு அசுர வளர்ச்சி என்பதால் அடுத்தடுத்த படங்களில் சம்பளம் உயரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்