fbpx
Connect with us

Cinemapettai

வீட்டிலேயே சூதாட்டம் நடத்திய பிரபல தமிழ் நடிகர்.. ராத்திரியோட ராத்திரியா அள்ளிதூக்கிய போலீஸ்!

Tamil Nadu | தமிழ் நாடு

வீட்டிலேயே சூதாட்டம் நடத்திய பிரபல தமிழ் நடிகர்.. ராத்திரியோட ராத்திரியா அள்ளிதூக்கிய போலீஸ்!

ஊரடங்கு காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் தங்களது பண்ணை வீட்டிற்கு செல்வதும், ஊர் சுற்றுவதும் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீட்டிற்கு சென்ற பின் எடுத்த புகைப்படத்தினால் சர்ச்சையில் சிக்கினார்.

அதுமட்டுமில்லாமல் சூரி,விமல் நண்பர்களுடன் வனப்பகுதியில் எடுத்த புகைப்படத்தின் மூலம் மாட்டிக்கொண்டு அபராதமும் கட்டினர். நடிகர் ஷாம் ஒரு படி மேல் சென்று நேற்று இரவு நண்பர்களுடன் பணம் வைத்து சீட்டு விளையாடுவது போன்ற புகார் வந்துள்ளது.

இதனால் காவல்துறையினர்  நுங்கம்பாக்கத்திலுள்ள  ஷாம்மின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளனர். அங்கு போய் பார்த்தால் பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அடிக்கடி வந்து பணம் கட்டி சீட்டு விளையாடுவதற்காக தனது வீட்டை கிளப் ஆக மாற்றி உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனால் நடிகர் ஷாம்முடன் சேர்ந்து 13 பேர் கைது செய்யபட்டு வழக்கும் பதிவு செய்துள்ளனர். பின்னர் விடுவிக்க பட்டதாக தெரிகிறது. இப்படி சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளது மட்டுமில்லாமல், சக நடிகர்கள் இயக்குனர்கள் விளையாடுவதற்கு அனுமதித்தது பெரிய தவறாக பார்க்கப்படுகிறது.

இதனால் ஊரடங்கு காலத்தில் ஷாம் செய்த இந்த தவறான செயலால் கோடம்பாக்கம் வட்டாரங்களில் அதிர்ச்சியாகி உள்ளது.

Continue Reading
To Top