சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

14 வருடங்களுக்கு முன்பு அஜித் கூட தங்கச்சியா நடிச்ச நடிகை.. இப்ப சன் டிவி சீரியலில் டாப் ஹீரோயின்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருடன் நடித்த அனைத்து நடிகர்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். அதனாலேயே பல நடிகர்களும் அஜித் படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

அதற்கு காரணம் அஜித் மூலம் நம்மளும் பிரபலம் அடைந்து விடலாம், மற்றொரு புறம் அதிகமான பட வாய்ப்புகள் வரும் என்பதால் பல நடிகர்களும் அஜீத், விஜய் போன்ற நடிகர்கள் படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.

அப்படி அஜித் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ஆழ்வார் திரைப்படத்தில் அவருக்கு தங்கச்சியாக நடித்து அஜித் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஸ்வேதா பந்தேகர். முதல் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்ததால் அடுத்து வள்ளுவன் வாசுகி என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.

shwetha bandekar
shwetha bandekar

அதன்பிறகு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். இவர் கடைசியாக தமிழில் நடித்த திரைப்படம் பூலோகம். இப்படம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது இருப்பினும் ஸ்வேதா பந்தயக்கு எந்த ஒரு பாராட்டும் கிடைக்கவில்லை.

இவருக்கு திறமையிருந்தும் சினிமா கை கொடுக்கவில்லை ஆனால் சீரியல் இவருக்கு நன்றாக கை கொடுத்துள்ளது. பிரபல சன் தொலைக்காட்சியில் சந்திரலேகா சீரியல் நடித்து குடும்ப பெண்கள் அனைவரையும் கவர்ந்தார்.

இவருக்காகவே சீரியல் பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகின. அந்த அளவிற்கு சந்திரலேகா சீரியல் மூலம் பிரபலமானார். அது மட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரங்களில் நடித்து தற்போது சினிமாவை தவிர சின்னத்திரை மற்றும் குறும்படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

Trending News