புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

இந்தி பிக்பாஸில் கதறி அழுத ஸ்ருதிகா.. சிரிச்சிட்டே இருப்பாங்களே, என்னாச்சு இவங்களுக்கு?

Shrutika: நடிகை ஸ்ருதிகா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எப்போதுமே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. சிரிப்புக்கு பேர் போன ஸ்ருதிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதறி அழுத வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சூர்யாவின் ஸ்ரீ, மாதவன் நடித்த நள தமயந்தி போன்ற படங்களில் நடித்த நடிகை சுருதிஹா பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்து மீண்டும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் மூலம் மீடியாவுக்குள் என்ட்ரி கொடுத்தார்.

அந்த ஒரு நிகழ்ச்சியிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் கவனம் ஈர்த்து விட்டார். எப்படி ஒரு பெண்ணால் இவ்வளவு பாசிட்டிவாக இருக்க முடிகிறது என அத்தனை பேரும் கொண்டாடினர். ஸ்ருதிகா தமிழில் நடந்து வரும் பிக் பாஸ் எட்டாவது சீசனில் கலந்து கொள்வார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.

கதறி அழுத ஸ்ருதிகா

ஆனால் அவர் இந்தி பிக் பாஸுக்கு போய்விட்டார். தமிழ் பெண்ணாக இந்தி பிக் பாஸில் இவர் என்ன செய்யப் போகிறார் என எல்லோருக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரு சில நாட்களிலேயே இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆனார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை கொஞ்சம் டேமேஜ் செய்ய ஆரம்பித்தார்கள். ஸ்ருதிகா தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பவர், என்னதான் இந்தி பேசினாலும் அவர் பேசுவது தமிழ் கலந்தது போல் இருக்கிறது, அவ்வப்போது தமிழ் பேசுகிறார் என அவரை ரொம்பவும் கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.

இதை பல மேடைகளில் ஸ்ருதிகா கண்டித்தும் இருக்கிறார். இந்தி ரசிகர்களே தமிழ் பெண் ஸ்ருதிகாவுக்கு ஆதரவு கொடுக்கும் அளவுக்கு பரிட்சயமானார். இந்த நிலையில்தான் அவர் கதறி அழுத வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது. ஸ்ருதிகா அந்த வீட்டிற்கு போனதிலிருந்தே அவருடன் நல்ல நட்பில் இருப்பவர் இந்தி நடிகை Chum Darang.

இவர்கள் இருவருக்கும் தற்போது ஏதோ மன கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பேச்சு வார்த்தை இல்லாததால் தான் ஸ்ருதிகா இந்த அளவுக்கு கதறி அழுததோடு, என்னை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்கள் என சொல்லி இருக்கிறார். போட்டி என்று வந்த பிறகு உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் விளையாடி தான் ஆக வேண்டும். ஸ்ருதிகாவின் இந்த செயல் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது

- Advertisement -

Trending News