கமல்ஹாசனின் மகள் என்று எங்கும் தன்னை காட்டிக்கொள்ளாமல் நடித்து, தனக்கென்று பெயர் சம்பாதித்தவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிப்பில் விரைவில் தெலுங்கு ப்ரேமம் வரவுள்ளது.

இந்த படத்தின் பாடல் டீசர் ஒன்று சமீபத்தில் வெளிவர, மலையாள ப்ரேமத்துடன் இதை ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஸ்ருதிஹாசனை மிகவும் கலாய்த்து வருகின்றனர், ஆனால், தெலுங்கு ரசிகர்கள் எப்போதும் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பையே விரும்புவார்கள்.

அப்படித்தான் இந்த பாடலின் காட்சி உள்ளது, எது எப்படியோ, இன்று நெட்டிசன்கள் கையில் சிக்கியது ஸ்ருதி தான்.