செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ரஜினி மகளால் 2 வருடங்கள் படவாய்ப்பு இல்லாமல் இருந்தேன்.. 10 வருடங்கள் கழித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

Rajinikanth: நடிகை ஸ்ருதிஹாசன் பன்முகத் திறமை கொண்ட திறமைசாலி. நடிப்பு, பாட்டு என தனக்கு பிடித்தது சுதந்திரமாக செய்யக்கூடியவர். சமீபத்தில் இவர் 3 படத்திற்கு பிறகு தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவத்தை பற்றி பகிர்ந்து இருக்கிறார்.

தமிழில் முதன் முதலில் ஸ்ருதிஹாசன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து அவர் நடித்த படம் தான் 3. இந்த படத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குனராக களம் இறங்கினார்.

பள்ளி பருவ காதல், பக்குவப்பட்டபின் வரும் காதல், திருமணத்திற்கு பின்னான காதல் என இந்த படம் காதலை கொண்டாடியது. இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் பெரிய அளவில் ரசிகர்களால் ஈர்க்கப்படாததால் படம் தோல்வி அடைந்தது.

மனம் திறந்த ஸ்ருதிஹாசன்

இந்த படத்தில் நடிகர் தனுஷ் உடன் ஸ்ருதிஹாசன் ரொம்பவும் நெருக்கமாக நடித்திருப்பார். அந்த சமயத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாகவும், இதனால் தனுஷ் வீட்டில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியாகின.

அதன் பின்னர் ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து இந்த பிரச்சனையை பேசி முடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஸ்ருதி இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு தன் தாயுடன் மும்பையில் சிறிது காலம் செட்டிலானார்.

இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் ஸ்ருதிஹாசன் ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதாவது 3 படத்திற்கு பிறகு அவருக்கு எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரும் அவரிடம் கதை சொல்லக் கூட வரவில்லை, அந்த இரண்டு வருடமும் நான் சும்மாதான் இருந்தேன் என சொல்லி இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் ஏழாம் அறிவு படத்தில் அவர் நடித்த சுபா கேரக்டர் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் ரொம்பவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் தான் இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

Trending News