புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நான் பூஜா ராமச்சந்திரன், இதுதான் என் அடையாளம்.. மொத்தமாய் குழப்பிய ஸ்ருதிஹாசன்

Shruti Haasan: நடிகை ஸ்ருதிஹாசனின் சமீபத்திய பேட்டி ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது. நடிகர் கமலஹாசனின் மகள்கள் ஆன ஸ்ருதிஹாசனாக இருக்கட்டும் அல்லது அக்ஷரா ஹாசன் ஆக இருக்கட்டும் எந்த ஒரு பேட்டியுமே மனம் திறந்து பேசக்கூடியவர்கள்.

அப்பா மாதிரி சுத்தி வளைக்காமல் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என பட்டென பதில் சொல்லிவிடுவார்கள். ஸ்ருதி மற்றும் அக்ஷரா இருவரும் வளர்ந்து வந்த காலகட்டம் என்பது கமலஹாசன் மற்றும் சரிகா விவாகரத்துக்கு பிறகு தான்.

சின்ன வயதிலேயே அப்பா அம்மா பிரிந்தது எங்களுடைய வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்தது என இரண்டு பேருமே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள். கமலஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் படம் ரிலீஸ் சமயத்தில் தான் அவருடைய மூத்த மகள் ஸ்ருதிஹாசனை மீடியாவில் பார்க்க முடிந்தது.

இதுதான் என் அடையாளம்

அதை தொடர்ந்து தான் அவர் ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். தன்னுடைய காதல் விஷயத்தில் கூட வெளிப்படையாக இருக்கக்கூடிய ஸ்ருதி சமீபத்தில் தன்னுடைய அடையாளத்தை பற்றி பேசி இருக்கிறார்.

வளர்ந்து வரும் காலகட்டத்தில் நான் கமலின் மகள் என அடையாளப்படுத்தப்படுவது என்னை வேறொரு நபராக காட்டியது. மேலும் கமலின் மகள் என்பதால் அவர் குறித்த நிறைய கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் அப்போது நான் யாராவது நீ யார் எனக் கேட்டால் பூஜா ராமச்சந்திரன் என பெயரை மாற்றி சொல்லி விடுவேன். ராமச்சந்திரன் என்பது எங்கள் குடும்ப டாக்டர் உடைய பெயர் என சொல்லி இருக்கிறார். அப்பா அம்மா சேர்த்து வைத்த சொத்தில் சுகமாக வாழக்கூடிய சில பிள்ளைகளுக்கு நடுவே தன்னுடைய அப்பாவின் அடையாளம் தனக்கான வளர்ச்சியாக இருக்கக் கூடாது என்பதில் ஸ்ருதி ரொம்பவும் கவனமாக செயல்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

Trending News