Connect with us
Cinemapettai

Cinemapettai

shruthi-hassan-viski

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரேக்கப் ஆகி ஆறே மாதத்தில் அடுத்த காதலரை தேர்வு செய்த ஸ்ருதிஹாசன்.. இந்த ஆண்டு கல்யாணம் பண்ணிப்பாரா.?

கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றன.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான புத்தம் புது காலை எனும் அந்தலாஜி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அந்தவகையில் ரசிகர் ஒருவர் உங்களுக்கு எப்போது திருமணம், தற்போது கூட நீங்க காதலில் தான் உள்ளீர்களா என பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் ஸ்ருதிஹாசன் இந்த ஆண்டு திருமணம் கிடையாது என்றும், தனக்கு ஒரு பாய் பிரண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் காதலிக்கிறீர்களா என கேட்ட கேள்விக்கு நான் எப்போதுமே காதலில் தான் இருப்பேன் என பதில் அளித்துள்ளார்.

shruthi-hassan

shruthi-hassan

இதனால் ஸ்ருதிஹாசனுக்கு இந்த ஆண்டு திருமணம் கிடையாது என்று தெரிய வந்துள்ளது. திருமணத்தை விட அவர் காதலை விரும்புவதாகவும் இந்த பதிலிலேயே தெரிகிறது.

Continue Reading
To Top