Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்?

shruthi lover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை காதலிக்கிறார்?

நடிகை ஸ்ருதி ஹாஸன் காதலர் தினத்தை லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்செல் என்கிற நாடக நடிகருடன் கொண்டாடியுள்ளாராம். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாஸன். மும்பையில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் காதலர் தினத்தை யாருடன் கொண்டாடினார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. ஸ்ருதியின் வாழ்வில் மீண்டும் காதல் வந்துள்ளது.

லண்டனில் பிறந்து வளர்ந்த மைக்கேல் கார்செல் என்பவரும், ஸ்ருதியும் காதலிக்கிறார்களாம். காதலர் தினத்தை ஸ்ருதியுடன் கொண்டாட மைக்கேல் லண்டனில் இருந்து மும்பை வந்துள்ளார். அவர் ஒரு வாரம் ஸ்ருதியுடன் தங்கியுள்ளார்.

https://www.instagram.com/p/BQhFTx2hfBM/

ஸ்ருதி ஹாஸன் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இரண்டு பேரின் கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள ஆணின் கால்கள் மைக்கேலுடையது என்று கூறப்படுகிறது.

shruthi lover
இங்கிலாந்தை சேர்ந்த ராக் பேண்டிற்காக ஒரு பாடல் பாட ஸ்ருதி லண்டனுக்கு சென்றாராம். அங்கு தான் மைக்கேல் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளார்.

மைக்கேலும், ஸ்ருதி ஹாஸனும் மூன்று மாதங்களாக காதலித்து வருகிறார்களாம். மைக்கேல் இங்கிலாந்தை சேர்ந்த நாடகக் குழுவில் நடிகராக உள்ளாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top