Tamil Cinema News | சினிமா செய்திகள்
சரக்கடிக்கும் ஸ்ருதிஹாசனும்.. அதுவும் இந்த வகை சரக்குனா விடவே மாட்டாங்களாம்
ஸ்ருதிஹாசன் சமீபத்தில் கலந்து கொண்ட டி.வி நிகழ்ச்சியில் தனக்கான போதை பழக்கம் மற்றும் காதல் பிரேக் அப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
Feet Up With The Stars Telugu என்ற தெலுங்கு டி.வி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன், தான் ஒரு காலத்தில் விஸ்கி என்ற மது வகைக்கு மிகவும் அடிமையாக இருந்தேன். அளவுக்கு அதிகமாக இந்த மது வகையை நான் எடுத்துக் கொள்வேன். என்னை அறியாமல் விஸ்கி என்னை அடிமையாக்கி விட்டது. ஒருகட்டத்தில் அதிலிருந்து மீண்டு வர நினைத்தேன்.
அதேபோல் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று தற்போது முற்றிலும் இந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு விட்டேன். மேலும் லவ் பிரேக்கப் பற்றி கேட்டபோது, என்னுடைய உணர்ச்சிவசப்படக் கூடிய கேரக்டருக்கு காதல் செட் ஆகாது என்பதை தெரிந்து கொண்டேன்.
அதுவுமில்லாமல் எங்களது காதல் சினிமாவில் வருவது போன்ற காதல் அல்ல. அதேபோல் இருவரும் சினிமாவை சேர்ந்தவர்கள் என்பதால் காதல் பிரிவு அதற்கான காரணத்தை எளிதில் புரிந்துகொண்டு விலக முடிந்தது இன்றும் கூலாக பதில் கூறியுள்ளார்.
