Tamil Cinema News | சினிமா செய்திகள்
அந்த மாதிரி நடிக்க ஆசைப்படும் கமல் மகள் ஸ்ருதி ஹாசன்.. நீங்க இன்னும் அது ஒன்னு தான் மேடம் பண்ணல!
தமிழ் சினிமாவில் பெரிய அளவு ஹீரோயினாக வலம் வரவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்(shruti haasan).
தெலுங்கில் இவர் காட்டும் கிளாமருக்கு அளவே கிடையாது. எவ்வளவு இறக்க முடியுமோ அவ்வளவு இறக்கி காட்டி நடிப்பதில் ஸ்ருதிஹாசனுக்கு நிகர் அவர்தான். இடையில் வெளிநாட்டு நபர் ஒருவருடன் காதலில் விழுந்தார் ஸ்ருதிஹாசன்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்குச் சென்றது அவர்களது காதல். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நடிகையின் காதல் நிறைவேறுகிறது என அனைவரும் குஷியில் இருந்தார்கள்.
ஆனால் யார் கண் பட்டதோ. அந்த காதல் பாதியில் கழண்டு விட்டது. இதனால் மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் தமிழில் லாபம் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் சில தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இனிமேல் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என ரசிகர்கள் அவரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்து விட்டதால் அடுத்ததாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைபடுவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ரசிகர்கள் தெலுங்கு படம் போல் தமிழிலும் தாராளம் காட்ட கூடாதா என இரட்டை அர்த்தங்களில் பேசி வருகின்றனர்.
