ரகசிய திருமணம் ஆயிடுச்சாமே? ரசிகரின் குண்டக்க மண்டக்க கேள்விக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்ருதிகாசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டு காதலரை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறு ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் ஒரே அறையில் தங்குவதும், வெளியில் சுற்றுவதும் என பொழுதை கழித்து வருகின்றனர். மேலும் இருவரும் மும்பையில் உள்ள ஸ்ருதிஹாசனின் பிளாட்டில் தான் குடியிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா முழுவதும் படப்பிடிப்புகளை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் படப்பிடிப்புகள் இல்லாமல் ரசிகர்களுடன் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பொழுதை கழித்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரடி தொடர்பு செய்யவும் வாய்ப்புள்ளதால் அதை பெரிதும் நடிகர் நடிகைகள் செய்து வருகின்றனர். அப்படி சமீபத்தில் ஸ்ருதிஹாசனும் அதைச் செய்தார்.

அப்போது ரசிகர் ஒருவர், நீங்களும் புதிய காதலரும் ரகசிய திருமணம் செய்து கொண்டீர்களாமே என விவகாரமான கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு ஸ்ருதிகாசன் பதில் என்னவாக இருக்கும் என அனைவரும் மூக்கை தீட்டி வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இருவருக்கும் தற்போது வரை திருமணமாகவில்லை எனவும், இப்போதைக்கு காதலர்கள்தான் எனவும் குறிப்பிட்டு எதிர்பார்ப்பை ஏமாற்றினார். இப்போதைக்கு காதலர் என்றால் பிற்காலத்தில் இருவரும் பிரியக்கூட வாய்ப்பு இருக்கிறது என ஒருபக்கம் கிளப்பிவிட்டனர்.

shruthi-hassan-cinemapettai-01
shruthi-hassan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்