Connect with us

Cinemapettai

சீரியலுக்கு சென்ற ஸ்ருதி ஹாசன்.. நிலைமை இப்படி மோசமா போச்சே

shruthi-haasan-in-serial

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீரியலுக்கு சென்ற ஸ்ருதி ஹாசன்.. நிலைமை இப்படி மோசமா போச்சே

தமிழ் சினிமாவில் வளர்ந்த நடிகைகள் படங்களில் நடிப்பது ஆச்சரியமில்லை ஆனால் சினிமாவில் பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த சுருதிஹாசன் தற்போது சீரியலில் நடிக்க உள்ளார். அவர் நடிக்கும் சீரியலின் பெயரும் கதாபாத்திரத்தின் விபரம் கீழ்கண்டவாறு.

சுருதி ஹாசன் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வருகிறார். அதன் பிறகு பிரபல சன் தொலைக்காட்சியில் ” ஹலோ சகோ ” எனும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் தற்போது அமெரிக்க டிவியில் “ டிரெட்ஸ்டோன் ” சீரியலில் நடிக்க உள்ளார்.

அந்த சீரியலின் நீரா படெல் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் அவர் டெல்லியில் ஒரு ஹோட்டலில் பணியாளராக வேலை செய்கிறார். அந்த பணியாளர் வேலை செய்து கொண்டே உலவும் வகையில் கதாபாத்திரத்தை அமைத்துள்ளனர். இந்த கதை டிம் கிரிங் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். பல படங்களில் சுருதிஹாசன் பார்த்துள்ளோம் ஆனால் இனிமேல் சீரியலிலும் பார்க்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். இதேபோல் எமி ஜாக்சன் “ சூப்பர் கேர்ல் ” என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top