Connect with us
Cinemapettai

Cinemapettai

shruthi-hassan-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அப்பா வயதுள்ள நடிகருக்கு ஜோடியாகும் ஸ்ருதிஹாசன்.. பல கோடிகளுக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!

கமலஹாசனின் மகளாக இருந்தாலும் ஸ்ருதிஹாசனு(shruthi haasan)க்கு சினிமா மார்க்கெட்டை தூக்கிவிட்டது என்னமோ தெலுங்கு சினிமாதான். சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை, கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக காட்டியதால் தான் தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகையாக இடம் பிடிக்க முடிந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்தியிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஸ்ருதிஹாசன் இடையில் வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவர் உடன் காதலை வளர்த்து வந்தார். இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவர் டாட்டா காட்டிவிட்டு தன்னுடைய நாட்டுக்கு பறந்துவிட்டார்.

இதனால் காதல் தோல்வியில் சுற்றிக் கொண்டிருந்த ஸ்ருதிஹாசனுக்கு தற்போது இந்தியாவைச் சேர்ந்த டூடுல் கலைஞர் ஒருவர் அன்பாக அரவணைத்துக் கொண்டதால் ஸ்ருதியின் அடுத்த காதலராக என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக மீண்டும் சுறுசுறுப்பான ஸ்ருதிகாசன் சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் சமீபத்தில் வெளியான கத்தி திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனால் அங்கு அவருக்கு மீண்டும் மார்க்கெட் மளமளவென உயர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கேஜிஎஃப் என்ற வெற்றி படத்தை கொடுத்த பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

அதேபோல் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணா(60)வுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். மற்ற படங்களை காட்டிலும் இவரது படத்தில் நடிக்க சில கோடிகளை எக்ஸ்ட்ராவாக கேட்டுள்ளாராம் ஸ்ருதி ஹாசன்.

balakrishna-cinemapettai

balakrishna-cinemapettai

Continue Reading
To Top