சங்கமித்ரா படத்தில் இருந்து ஸ்ருதிஹாஸன் தானாக வெளியேறவில்லை என்று தகவல் வந்தது. சுந்தர் சி. இயக்கும் வரலாற்று சிறப்புமிக்க படம் சங்கமித்ரா. இந்த படத்தில் சங்கமித்ராவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட ஸ்ருதி ஹாஸன் படத்தில் இருந்து வெளியேறினார்.

கதையை முழுதும் தெரிவிக்கவில்லை என்பதால் படத்தில் இருந்து வெளியேறுவதாக ஸ்ருதி தெரிவித்தார். ஆனால் தயாரிப்பு தரப்பில் தற்போது வேறு விதமாக சொல்கிறார்கள். தேனாண்டாள் ஸ்டுடியோஸின் சிஇஓ ஹேமா ருக்மினி இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஸ்ருதி ஹாஸன் ஒன்னும் சங்கமித்ரா படத்தில் இருந்து தானாக விலகவில்லை என்றும். அவர் விலகவில்லை, வெளியேற்றப்பட்டார் என்கிறார்.

இதை ஸ்ருதி தான் விளக்க வேண்டும். ஸ்ருதிக்கு பதில் நல்ல நடிகையை சங்கமித்ராவாக தேர்வு செய்துவிட்டார்களாம். அந்த நடிகை யார் என்பதை பின்னர் அறிவிப்பார்கள்.