fbpx
Connect with us

Cinemapettai

ஸ்ருதி ஹாசனுக்கு இன்று பிறந்த நாள்.. தமன்னா கொடுத்த சூப்பர் பரிசு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஸ்ருதி ஹாசனுக்கு இன்று பிறந்த நாள்.. தமன்னா கொடுத்த சூப்பர் பரிசு

நடிகை ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகள் என்பதை தாண்டி சிறந்த நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.

அண்மைக்காலமாக தமிழில் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் தெலுங்கில் அதிகமாக இருந்தார். இவருக்கு தமிழ் மற்றும தெலுங்கில் ரசிகர்கள் பெரிய அளவில் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது பிறந்த நாளை ஜனவரி 28ம் தேதி கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து சொல்லி இன்றே பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஸ்ருதியின் நெருங்கிய தோழியான நடிகை தமன்னா வித்தியாசமாக வாழ்த்து சொல்லியிருக்கிறார். அவர் வெளியிட்ட பதிவில் ஸ்ருதி ஹாசன் இளவரசி போல் அமர்ந்து இருக்கும் புகைப்படம் உள்ளது. அதில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதை பொதுவான டிபியாக வைக்கலாமே என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://twitter.com/tamannaahspeaks/status/1221787469793853440

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top