17 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி, மழை போன்ற படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஸ்ரேயா.

Shriya-and-Vijay

ரஜினி, விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
கடந்த வருடம் சிம்புவின் அன்பானவன் அடங்காதவன் அசாராதவன் படத்தில் நடித்தார். தமிழில் இவர் நடிப்பில் நரகாசூரன் படம் மட்டும் ரிலீசுக்கு உள்ளது.

சில தினங்களுக்கு முன் இவருக்கும், இவரது ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் மார்ச் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. ஆனால், அது வதந்தி என கூறியிருந்தார் அவரது தாயார் நீர்ஜா. ஆனால், தற்பொழுது ஸ்ரேயாவுக்கு திருமணம் நடக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

#ShriyaSaran

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமணம் உறுதியாகி இருக்கிறது. அவர் ரஷ்ய விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவ் (Andrei Koscheev) என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19 என மூன்று நாட்கள் உதய்ப்பூரில் நடக்கவிருக்கிறது.

அதிகம் படித்தவை:  பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன் என்ன ஆனார் தெரியுமா உங்களுக்கு.?
andreikoscheev

இந்த திருமண பற்றி ஷரியா “என்னுடைய வாழ்க்கை சுவாரஸ்யமான கதைகள் அடங்கியது. அதில் எனது திரைப் பயணம் பற்றி மட்டும் பேசலாம். எனது பர்சனல் வாழ்க்கை குறித்து வேண்டாம்” எனக் கூறியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  பரோட்டா சூரி பழசு - சிக்ஸ் பாக் சூரி தான் புதுசு ! வைரலாகுது சீமராஜா சிவகார்த்திகேயன் வெளியிட்ட போட்டோ !

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

35 வயதை கடந்துவிட்டார் ஸ்ரேயா !!