Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அகிலுக்கு டாட்டா காட்டிய ஸ்ரேயா திருமணம் முடிந்தது.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

தெலுங்கு நடிகர் அகில் அக்கினினிக்கு நிச்சயம் செய்த ஸ்ரேயா, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட தகவல்கள் இணையத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

டோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் நாகர்ஜூனா. இவர் தன் சக நடிகையான அமலாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பிறந்தவரே அகில் அக்கினினி. தன் தந்தை, தாய் போலவே அகிலும் சிறு வயது முதலே நடித்து வருகிறார். சுட்டி குழந்தை படத்தில் படு சேட்டை செய்தது அகில் தான் என்பது பலருக்கு இன்று வரை தெரியாமலே இருக்கிறது. பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் தனது பேரன் அகிலை அவரின் மனம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அப்படத்தில் அரிதிலும் அரிதாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களான நாகேஸ்வர ராவ், நாகர்ஜூனா, அகில் ஆகியோர் இணைந்து நடித்தனர். தொடர்ந்து, அகில் சில குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து கடந்த வருடம், நாகர்ஜூனா தனது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடு மகனான நாகசைதன்யாவிற்கும், அகிலுக்கு திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். இதில் நாக சைதன்யா, சக நடிகை சமந்தாவை காதலித்து வந்ததால் இரு வீட்டாரும் அவர்கள் திருமணத்திற்கு முழு சம்மதத்தை தெரிவித்தனர். அதேப்போல, அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிகே ரெட்டியின் பேத்தியும், ஆடை வடிவமைப்பாளரான ஸ்ரேயா பூபலும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால், இரு மகன்கள் திருமணத்தையும் வெகு விமரிசையாக செய்ய நாகர்ஜூனா முடிவு செய்து இருந்தார். அதன்படி, அகிலின் திருமணம் முதல் செய்வதாக முடிவு செய்யப்பட்டு பிரம்மாண்டமாக நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தேறியது. ஆனால், திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் நிலையில், திருமணம் நின்று விட்டதாக இரு வீட்டார் தரப்பிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. காதலர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பு பெரிதாகி ப்ரேக் அப் தான் முடிவு என நின்றதால் திருமண நிகழ்வு நடந்தேறவில்லை.

இந்நிலையில், ஸ்ரேயா பூபாலுக்கு திருமணம் முடிந்து இருக்கிறது. ஸ்ரேயா, அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவரும், நிறுவனருமான பிரதாப் ரெட்டியின் பேரன் அனிந்தித் ரெட்டியை பாரிஸீல் திருமணம் செய்து இருக்கிறார். வெகு சில உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்நிகழ்வில் ராம்சரணும், அவர் மனைவி உபாசனாவும் கலந்து கொண்டுள்ளனர். உபாசனாவின் அம்மாவும், அனிந்தித்தின் அம்மாவின் சகோதரிகள் எனத் தெரிகிறது. இதை தொடர்ந்து, ஸ்ரேயா திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top