Sports | விளையாட்டு
ஆர் சி பி அணிக்கு எதிராக ஹாட் ட்ரிக் எடுத்து அசத்திய பெங்களூரை சேர்ந்த இளம் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர். வீடியோ உள்ளே.
ஐபில் இல் நேற்றயை போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி துவங்க தாமதம் ஆனது. ஐந்து ஓவர் போட்டியாக மாற்றப்பட்டு துவங்கியது.
ஆர் சி பி முதலில் ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 62 றன் குவித்தனர். ராஜஸ்தான் 41 / 1 என நிலையில் மீண்டும் மழையால் போட்டி கைவிடப்பட்டது. தல ஒரு பாய்ண்ட் கொடுக்கப்பட்டது. 10 பாலில் 22 ரன் தேவை என்ற நிலையில் இவ்வாறு ஆகியது.
.@rajasthanroyals jump to No. 5 on the points table with one game left in hand. Here's how things stand.#RCBvRR pic.twitter.com/q4d5qJPbsb
— IndianPremierLeague (@IPL) April 30, 2019
போட்டி துவங்கும் முன்பு இருந்தே ஷ்ரேயாஸ் கோபால் தான் பலரின் கவனத்தை பெற்றார். ஏன் என்றால் இவர் டி வில்லேர்ஸ் மற்றும் கோலி விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தி வருபவர். 25 வயதாகும் லெக் ஸ்பின் வீசும் ஆல் ரௌண்டார். பெங்களுருவில் பிறந்து வளர்ந்தவர். தன் சொந்த மைதானத்தில் அசத்தியுள்ளார்.
முதல் ஓவரை ஆரோன் வீச 23 ரன்கள் சென்றது. பின்னர் கோபால் வீசிய முதல் மூன்று பால்களிலும் 12 ரன் குவிக்கப்பட்டது. அதன் பின் ஹாட் ட்ரிக் எடுத்தார். 6 4 2 W W W.
முதலில் கோலி விக்கெட் லாங் ஆன் திசையில் கேட்ச், அடுத்த பாலில் லாங் ஆப் திசையில் அடிக்க முயன்ற டி வில்லேர்ஸ் அவுட் ஆனார். மூன்றாவதாக ஸ்டோனிஸ் சர்க்ளிக்குள் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
#shreyasgopal #hattrick #RCBvsRR @RCBTweets @rajasthanroyals https://t.co/MFniTivLd0
— Subash. R (@baassu) May 1, 2019
இதுவே நேற்றயை ஐபில் ஸ்பெஷல்.
