Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இணையத்தில் காட்டு தீ போல் பரவும் நடிகை ஸ்ரேயாவின் படும் கவர்ச்சி காட்சிகள்.!வீடியோ உள்ளே.!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘துருவங்கள் 16’. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 2016-ம் ஆண்டில் இறுதியாக வெளியான லாபகரமான படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள்.

இயக்குநர் கார்த்தி நரேன் தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். தற்போது தனது அடுத்த படம் குறித்து, “2-வது படம் ’நரகாசுரன்’… மிகத் தீவிரமான மர்மத் திரைப்படம். ’துருவங்கள் 16’ கதை வர்ணனையையும் மிஞ்சும்.

தேவதைகள் மட்டுமல்ல, சாத்தான்களுக்கும் ஒரு இருண்ட பக்கம் இருக்கும்” என்று ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கார்த்திக் நரேன்.

அரவிந்த்சாமி நடிக்கும் “நரகாசுரன்” படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ரேயா. இனி, தனக்கு, கதாநாயகி வேடங்கள் கிடைப்பது அரிது என்பதால், தன் ரூட்டை மாற்றியுள்ளார், வீர போக வசந்த ராயலு என்ற தெலுங்கு படத்தில், ஆண்களை போன்று தன் தலைமுடியை, கத்தரித்து, ஆக் ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

மேலும், மலையாளத்தில், பிரகாசம் பிரதுன்ன பெண்குட்டி என்ற படத்திலும், இதுவரை நடிக்காத மாறுபட்ட வேடத்தில் நடிப்பதாக சொல்கிறார்கள்.

இந்நிலையில், அவரது வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமி உள்ளார் அம்மணி. பின் புறமாக திரும்பி கொண்டு டக்கென முன்புறம் திரும்பி ஸ்லோவ் மோசனில் கவர்ச்சி பார்வையை வீசும் ஸ்ரேயாவின் இந்த வீடியோ தான் இப்போது இணைய இளசுகள் வட்டத்தில் வைரல்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top