Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீ டூ விவகாரம். ஹீரோக்களை சீண்டிப்பார்க்கும் விக்ரம் வேதா புகழ் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

ஷ்ரதா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை இந்தியன் ஆர்மியில் பணிபுரிந்தவர், அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பல மொழிகளில் பேசும் திறனுள்ளவர்.
சினிமாவில் இவர் அறிமுகமானது மலையாள படத்தில்தான். அதன் பின் கன்னடத்தில் இவர் நடித்திருந்த திரில்லர் படமான யூ டர்ன் படமே இவர் மேல் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வைத்தது.
தமிழில் இவரது முதல் படம் காற்று வெளியிடை, இதில் இரண்டாம் கதாநாயகியாக வந்தாலும் இவர் அடுத்து நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து . தமிழில் இவன் தந்திரன், ரிச்சி படங்களில் நடித்துள்ளார்.
ME TOO
இந்நிலையில் மீ டூ விவகாரம் பற்றி இவர் ட்வீட் தட்டியுள்ளார்.
“எனக்கு சிறிது ஆர்வமாக உள்ளது. எங்கே அந்த ஆண்கள், 70 mm திரையில் தங்கை, தாயை காப்பற்றுவேன் என்று 100 கெட்டவர்களை அடித்து, வண்டிகளை எல்லாம் பறக்க விடுவார்களே அவர்கள். உங்கள் மேஜிக்கை இப்பொழுது நிகழ்த்துங்கள். எதாவது சொல்லுங்கள். நாடிகளின் பாலியல் டார்ச்சரை பற்றி நீங்கள் என்ன நினைக்குறீர்கள். அவ்வளவு தான்.
வண்டிகளை பறக்கவிடுவது ஈஸி ஆனால், பாலியல் வன்புணர்வு செய்பவர்களை ஒத்துக்க வைப்பது மிக கஷ்டம். எந்த பெண்ணும் விளம்பறதுக்காக இப்படி சொல்வதில்லை. ” என்று டீவீட்டியுள்ளார்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் நடிக்கும் இவர் பொதுவாக சொல்கிறாரா அல்லது கன்னடா சினிமாவை தான் சொல்கிறாரா என குழப்பத்தில் உள்ளனர் கிசு கிசு பேசுபவர்கள்.
