Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை அஜித்துடன் ஷூட்டிங்கில் க்ளிக்கிய போட்டோவை நன்றிகளுடன் பகிர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை அஜித்துடன் ஷூட்டிங்கில் க்ளிக்கிய போட்டோவை நன்றிகளுடன் பகிர்ந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்

ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் பிராமண கன்னடிகா குடும்பத்தை சார்ந்தவர். இவரது தந்தை இந்தியன் ஆர்மியில் பணிபுரிந்தவர், அம்மா ஒரு பள்ளி ஆசிரியை. பல மொழிகளில் பேசும் திறனுள்ளவர். சினிமாவில் இவர் அறிமுகமானது மலையாள படத்தில்தான். அதன் பின் கன்னடத்தில் இவர் நடித்திருந்த திரில்லர் படமான யூ டர்ன் படமே இவர் மேல் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்க வைத்தது. தமிழில் இவரது முதல் படம் காற்று வெளியிடை, இதில் இரண்டாம் கதாநாயகியாக வந்தாலும் இவர் அடுத்து நடித்த விக்ரம் வேதா படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து . தமிழில் இவன் தந்திரன், ரிச்சி, அருள்நிதியின் கே 13 படங்களில் நடித்துள்ளார். இந்த வரிசையில் தான் நேர்கொண்ட பார்வை.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக். டாப்ஸீ ரோலில் ஷ்ரத்தா. அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளனர். இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்கும் பெண்கள் எது போன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் இப்படத்தில் அஜித்.

படம் வெளியாகி ஹிட் நடித்துள்ள நிலையில், தன் ட்விட்டரில் ஷ்ரத்தா போட்டோ ஒன்றை அப்லோட் செய்துள்ளார்.

20000 லைக்குகள் பெற்று ட்ரெண்டிங் ஆகிறது இந்த போட்டோ.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top