விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெற உள்ள முழு கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, அன்றைய நாளின் சினிமா காட்சிகளை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ரத்து செய்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆதரவு பெருகி வருகிறது.

அதிகம் படித்தவை:  தமிழக இளைஞர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதி - சகாயம் ஐ.ஏ.எஸ் கொந்தளிப்பு!

இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வரும் ஏப்ரல் 25-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அன்று தமிழகத்தில் உள்ள திரையரங்குகளின் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.”
என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  "பார்த்தது போதும், பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்." நம்மவர் கமலின் அதிரடி பேச்சு ! வீடியோ உள்ளே .

முன்னதாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள், முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்தனர்.இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

shows cancelled in TN theatres on April 25 to support Farmers protest