Connect with us

Cinemapettai

தமிழகத்தில் மதுக்கடைகள் 7ம் தேதி முதல் திறக்கலாம்.. வெடி வெடித்து கொண்டாடிய குடிமக்கள்

wine-shop

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழகத்தில் மதுக்கடைகள் 7ம் தேதி முதல் திறக்கலாம்.. வெடி வெடித்து கொண்டாடிய குடிமக்கள்

நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகும் சூழ்நிலையில் தாகசாந்திகளை சாந்தப் படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது வரும் 7ம் தேதி முதல் அனைத்து ஒயின் ஷாப்புகளில் தமிழ்நாட்டில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதில் தமிழக அரசு ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது மதுபான கடைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நபருக்கு இன்னொரு நபருக்கும் உள்ள இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும்.

மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதற்கு அனுமதி கிடையாது. மதுபான கடைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும்.

அனைத்து மதுபான கடைகளும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மதுபானக் கடைகளிலும் தேவைக்கு ஏற்ப கூடுதல் நபர்களை பணியில் அமர்த்தும் அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுபோன்ற நிபந்தனைக்குட்பட்ட தமிழ்நாட்டில் அனைத்து மதுபான கடைகளும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும் மதுபானக்கூடங்கள் திறப்பதற்கான அனுமதி இல்லையாம். இதனால ஒரு சில இடங்களில் வெடி வெடித்து கொண்டாய் உள்ளனர் நம் குடிமக்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top