Connect with us

Cinemapettai

சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது.! டிக்கெட் கட்டணம் பற்றி மாஸ் தகவல்.! குஷியில் ரசிகர்கள்

vishal

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமா ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்தது.! டிக்கெட் கட்டணம் பற்றி மாஸ் தகவல்.! குஷியில் ரசிகர்கள்

தமிழ் நாட்டில் பல பிரச்சனைகள் நடந்து வருகிறது காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டர்லைட், மாணவிகளை சீரழிக்கும் பேராசிரியர், சினிமா ஸ்ட்ரைக், ஆஷிபா என பல பிரச்சனைகள் ஆனால் எல்லா பிரச்சனைக்கும் போராடித்தான் ஆக வேண்டி இருக்கிறது.

vishal

அதுவும் தமிழ் நாட்டில் எந்த பிரச்சனை என்றாலும் போராடித்தான் வெற்றி பெறவேண்டி இருக்கிறது, தமிழகம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது, இங்கு இருக்கும் சினிமாவிலும் அப்படிதான் கடந்த ஒன்றரை மாதமாக சினிமாவில் ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது.

இப்பொழுது தான் தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளது இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூகமாக முடிவு எடுக்க பட்டதால் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சில மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார், இரண்டு முக்கிய செய்திகளை அறிவித்துள்ளார் நடிகர் விஷால்.

அதில் ஓன்று இனி படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயக்கபடும், மற்றொன்று ஜூன் 1 முதல் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்ய ஒரு புதிய இணைய தளம் அறிமுகபடுத்தப்படும் என அறிவித்துள்ளார். தற்பொழுது ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளதால் வரும் வெள்ளிகிழமை புதிய படம் ரிலீஸ் ஆகும், மீண்டும் நிற்று போன அனைத்து படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கும் என எதிர்ப்பார்கபடுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top