Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவுதம் மேனன் இயக்கத்தில் அசத்தும் சூர்யா.. வைரலாகுது ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!

சூர்யா தமிழ் சினிமாவில் தனக்கென்ற முத்திரையை கடின உழைப்பால் பெற்றவர். நடிகர் என்பதனை விட நல்ல மனிதர் என பெயர் எடுத்தவர்.  சமீபகாலமாக ஒரு மிக பெரிய ஹிட் படத்துக்காக வைட்டிங்கில் இருந்தார், OTT யில் நேரடி ரிலீஸ் ஆன சூரரை போற்று அவர்க்கு அந்த வெற்றியை பெற்று தந்துள்ளது.

அடுத்தடுத்து சூர்யா நடிப்பில் வெற்றிமாறனின் வாடிவாசல், பாண்டிராஜின் சன் பிக்சர்ஸ் படம், ஞானவேல் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையில் உள்ளன. இதற்கு முன் அவர் நடிக்கும் ப்ரொஜெக்டே நவரசா. திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படம் எடுக்கப்பட்டு வருகிறது. நெட்பிலிக்ஸ் தளத்தில் நேரடி ரிலீஸ்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இதில் கெளதம் மேனன் படத்தில் நடிப்பது சூர்யா. ஒளிப்பதிவு பி சி ஸ்ரீராம். ஒளிப்பதிவாளர் தனது த்விட்டேர் பக்கத்தில் தட்டியுள்ள ஸ்டேட்டஸ் மற்றும் போட்டோ இணையத்தில் லைக்ஸ் குவித்து வருகின்றது.

pc sreeram tweet

“கெளதம் மேனன் வெப் பிலிம் படப்பிடிப்பில் இருக்கிறேன். புதிய வகையில் கதை சொல்லப்படுவதை அனுபவித்து வருகிறேன். நம் முன்னால் சூர்யா என்கிற எரிமலை போன்ற ஒரு திறமையாளர் தனது நடிப்பால் நம்மை மயக்கும் சமயத்தில் வேற என்ன வேண்டும்.”

navarasa cinemapettai

மேலும் அவர் இந்த போட்டோவையும் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
To Top