fbpx
Connect with us

Cinemapettai

உயிரை காவு வாங்கிய படப்பிடிப்புத் தளங்கள்.. மூன்று பேரை தவிர இதற்கு முன் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

shooting

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உயிரை காவு வாங்கிய படப்பிடிப்புத் தளங்கள்.. மூன்று பேரை தவிர இதற்கு முன் இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

சமீபகாலமாக பிரமாண்ட படங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் சம்பவம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன்2. இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சச கிரேன் விழுந்த விபத்தில் மாட்டி 3 பேர் இறந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் படப்பிடிப்பில் பாதுகாப்புகள் அந்த அளவு இல்லையா என பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் இதற்கு முன் தளபதி விஜய் நடிப்பில் உருவான பிகில் படத்தில் கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன் இதே இடத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்கள் என்ற செய்தியும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஜினியின் காலா படப்பிடிப்பின்போது இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்புத் தளத்திற்கு முன்பாக இந்த இடத்தில் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது. அதிலும் பலர் கைகால்கள், உயிர்களை இழந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு கவசங்களை அதிகரிக்க வேண்டிய கடமை தயாரிப்பாளர்களுக்கு உண்டு என்பதை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் அறிக்கை விட வேண்டும் என்கின்றனர் கோலிவுட் வாசிகள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top