ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் நடிக்க ஆரம்பித்தார் உதயநிதி. ஹீரோயினாக தமன்னா நடித்துள்ளார்.

Udayanidhi Stalin – Seenu Ramasamy

கண்ணே கலைமானே

இப்படத்தை உதயநிதி ஸ்டாலினே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜலேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர். இப்படம் விவசாயம் சார்ந்த படமாம். இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளாராம்.

சீனு ராமசாமி

தர்மதுரை படத்திற்குப் பிறகு சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து ‘மாமனிதன்’ படத்தை இயக்குவார், என்று தகவல்கள் வெளியாகின. பின்னர் தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. பின்னர் தான் ஜனவரி 19ஆம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியது.

இப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடை பெற்றுவந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று முடிவடைந்து விட்டதாக தமன்னா தன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.