Tamil Cinema News | சினிமா செய்திகள்
முடிந்தது ஷூட்டிங் : பட்டாச ரெடி பண்ணுங்க ! இது சர்க்கார் தீபாவளி
Published on

தளபதி விஜய் முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்ச்சர்ஸ் , ரஹ்மான் , கீர்த்தி சுரேஷ் , வரலக்ஷ்மி சரத்குமார் என பிரமாண்டமாக உருவாக்கி வருகின்றது சர்க்கார்.
சில மாதங்களுக்கு முன்பே விசுவாசம் தீபாவளி டு பொங்கல் ரிலீசுக்கு மாறியது. சில தினங்களுக்கு முன் சூர்யா செல்வராகவன் இணையும் ” NGK ” படமும் தீபாவளி ரிலீசில் இருந்து விலகியது. இந்நிலையில் கோலிவுட்டின் மொத்த பார்வையும் தளபதியின் சர்க்காரின் மேல் தான் இருந்தது.
இந்நிலையில் இன்று படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக குரூப் போட்டோவுடன் தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் வரலக்ஷ்மி.
மேலும் தளபதியிடன் நடிக்கும் தன் கனவை நினைவாகிய இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார். தீபாவளி வரை காத்திருக்க வேண்டுமே ? பட்டாசை ரெடி பண்ணுங்க என்று படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்து விட்டார்.
