ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் என்ற இமேஜில் இருந்து முன்னணி நடிகர் என்ற அடைமொழியை பெற்றுவிட்டார் ஜி வி. பாலாவின் நாச்சியார் இவரது நடிப்பை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக்கிவிட்டது. மேலும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் நாம் சேர்ந்து படம் பண்ணலாம் கால் ஷீட் கிடைக்குமா ஜி வி என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது.

நம் கோடம்பாக்கத்தை பொறுத்தவரை அதிக படங்கள் கை வசம் வைத்திருப்பவர்கள் என்றால் அது விஜய் சேதுபதி மற்றும் ஜி வி தான். 4ஜி, ஐங்கரன், செம, அடங்காதே, விர்ஜின் மாப்பிள்ளை, குப்பத்து ராஜா, 100% காதல், சர்வ தாள மையம், ரெட்டை கொம்பு, கறுப்பர் நகரம் என்று லிஸ்ட் நீண்டு கொண்ட செல்கிறது.

அதிகம் படித்தவை:  வெயிலை சமாளிக்க ஒரு நகரத்துக்கே ஐஸ்க்ரீம் ட்ரீட் கொடுத்த பிரபல நடிகர்.!

குப்பத்து ராஜா

kuppathuraja

‘குப்பத்து ராஜா’ படத்தின் வாயிலாக பிரபல நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்குனர் ஆகிறார்.ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் என டபுள் ஹீரோயின். ஜி.வி.யே இசையமைத்து வரும் இதற்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

அதிகம் படித்தவை:  விக்ரம் வேதா ரீமேக்! 2 டாப் நடிகர்கள் இணைகிறார்கள்.. யார் தெரியுமா?
kuppathu raja

மேலும் இப்படத்தில் இயக்குனர் பார்த்திபன், எம்எஸ் பாஸ்கர், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை எஸ் போகஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரவணன், சிராஜ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தற்பொழுது இப்படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்துவிட்டது.

kuppathu raja
kuppathu raja
kuppathu raja
kuppathu raja
இந்த படம் வரும் மே மாதத்தில் வெளியாகவுள்ளது.