வட சென்னை

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”. இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங்.

Dhanush

தனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

vada chennai

கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . வட சென்னையில் உள்ள ரௌடிசம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை துகிலுரித்து காட்டுமாம் இப்படம்.

vada chennai

வட சென்னை – பார்ட் 1

முதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். அந்த பார்ட் 1 ஷூட்டிங் முடிவடைந்ததாம் . நேற்று மாலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இனி போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தான் .

இயக்குனர் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் துணை நடிகர்கள் என தங்கள் கெட் – அப்களில் உள்ள அசத்தலான போட்டோ இதோ ..

#ShootingSpot #WorkingStills #CinemaPettai #Getthu #VadaChennai #Shoot #Wrap

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.