Sports | விளையாட்டு
அதிர்ச்சியில் சிஎஸ்கே அணியின் வீரர்கள்.. களையெடுக்க காத்திருக்கும் மேலிடம்!
2020 ஐபிஎல் சிஎஸ்கே அணி மிகவும் மோசமாக விளையாடி கொண்டிருக்கிறது, தோனி உட்பட மூத்த வீரர்களின் மீது கோபத்தை காட்டி வருகிறது அணி நிர்வாகம்.
எல்லா வருடமே பிளே ஆப் செல்லும் சிஎஸ்கே அணி, இந்த வருடம் அந்த பெருமையை இலக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது . இந்த வருடம் பிளே ஆப் வாய்ப்பு இழக்கும்பட்சத்தில் அது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய அவமானமாக இருக்கும்.
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்விக்கு ஒருவர் மட்டும் காரணம் என்று கூறிவிட முடியாது. கேதர் ஜாதவ் தான் காரணம் என்று ஒட்டுமொத்தமாக கூறிவிட முடியாது.
தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணிக்கு ஓப்பனிங் இறங்கிய முரளி விஜய், வாட்சன் இருவரும் நன்றாக ஆடவில்லை. டோனியும் எல்லா போட்டியிலும் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார்.
ஆல்ரவுண்டர்களாகிய ஜடேஜா மற்றும் ஓரளவு சமாளித்து ஆடுகிறார் பாடுகிறார். ராயுடு அவ்வப்போது அதிரடியாக ஆடினாலும், சில சமயம் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுகிறார்.
பவுலிங் என்று எடுத்துக் கொண்டால் ஜடேஜா, சாகர், பிராவோ, கரன் சர்மா, சாவ்லா என்று யாருமே பெரிய அளவில் விக்கெட் டேக்கர்களாக இல்லை. பவுலர்கள் எல்லோருமே சொதப்பிவிட்டனர்.
இதனால் சிஎஸ்கே அணி நிர்வாகம் மூத்த வீரர்களை களையெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

csk
