தமிழில் மிகப் பிரம்மாண்டமாக தயாராக உள்ளபடம் சங்கமித்திரா இந்தப் படத்தில் நடிப்பதாக இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டார்.

இவர் விலகியதற்கு உண்மையான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் ஸ்ருதிஹாசன் கேன்ஸ் படவிழாவிற்கு செல்லும் முன்னரே நடிக்க மாட்டேன் என்று தெரிவித்து இருக்கலாம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

ஸ்ருதிஹாசனுக்கும் நெட்டிசன்களுக்கும் ஏழாம் பொருத்தம். பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற செய்தி வந்ததுமே அதைப்பலரும் விமர்சித்தனர்.

அதிலிருந்து இன்று வரை நெட்டிசன் ஸ்ருதி என்றாலே அல்வா போல கேலி கிண்டல் செய்வார்கள்.இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் நடித்து வெளிவர உள்ள ஹொரி தேரி ஹிந்தி படத்தின் புரோமோசன் வேலைகளில் ஈடுபட்டள்ளார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில் சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி கருத்துச் சொல்லும் நெட்டிசன்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை. என் முகம், என் உடம்பு இதை வைத்து நான் என்ன செய்தாலும் அது மற்றவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று.

அவர்கள் யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஒரு நடிகை தன் உடல் அமைப்பில் அடிக்கடி மாற்றங்கள் செய்வது இயற்கைதான்.

தொடர்ந்து ஒரே மாதிரியான உடலமைப்பை வைத்துக்கொள்ள முடியாது. சில சமயங்களில் கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ப உடலை ஏற்றவும், குறைக்கவும் வேண்டியிருக்கும் என்று பேட்டியில் கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here