Connect with us
Cinemapettai

Cinemapettai

எஸ் ஏ சந்திரசேகரின் முகத்திரையை சுக்குநூறாக கிழித்த ஷோபா சந்திரசேகர்.. அதிரடியான பேட்டியால் ஆடிப்போன எஸ்ஏசி!

vijay-chandrasekar

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எஸ் ஏ சந்திரசேகரின் முகத்திரையை சுக்குநூறாக கிழித்த ஷோபா சந்திரசேகர்.. அதிரடியான பேட்டியால் ஆடிப்போன எஸ்ஏசி!

தமிழ் திரையுலகில் ‘தளபதி’ என்ற பட்டத்துடன் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவருக்கு தமிழகமெங்கும் உள்ள ரசிகர் பட்டாளத்தை பற்றியும் அவர்கள் விஜய் மீது வைத்திருக்கும் அன்பைப் பற்றியும் விளக்கிக் கூற இயலாது.

இந்த நிலையில் நடிகர் விஜய்கே தெரியாமல் அவருடைய அப்பா எஸ் ஏ சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கத்தை ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக’ மாற்ற தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்தது, கோலிவுட்டிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் எஸ் ஏ சந்திரசேகர் விஜயின் புகழைப் பயன்படுத்தி மற்ற கட்சிகளுடன்  கூட்டணி போட பேரம் பேசியதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

இது ஒருபுறமிருக்க தளபதி விஜய்யோ தனக்கும், இந்த கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை அடுத்து தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய கூடாது என்றும் கூறினார்.

இவ்வாறு அடிக்கடி அரசியல் விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்த  எஸ்எஸ்சி முயற்சி செய்ததால் தான், கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகர் விஜய் அப்பாவுடன் பேசுவதையே நிறுத்தி விட்டார் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எஸ்எஸ்சி- இடம் இன்று கேட்டனர். அதற்கு பதில் சொல்ல முடியாமல் எஸ்எஸ்சி திணறி போனது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தாயான ஷோபா சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றை அளித்து எஸ் ஏ சி யின் முகத்திரையை கிழித்து உள்ளார்.

அதாவது, ‘அரசியல் பற்றி தன்னிடம் பேச வேண்டாம் என விஜய் பலமுறை கூறியும் எஸ்எஸ்சி கேட்காத காரணத்தால் தான் விஜய், அவரது அப்பாவிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்’ என உண்மையை  வெளிப்படையாய் கூறி விஜய்யின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் ஷோபா சந்திரசேகர்.

மேலும் இதை அறிந்த விஜய் ரசிகர்கள், ‘எங்களுக்கு அப்பவே தெரியும்.. தளபதி வேற லெவல்ன்னு’ என்று தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் விஜயின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பும் நம்பிக்கையும் பல மடங்கு அதிகமாய் பெருகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

rajini s a chandraseker

rajini s a chandraseker

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top