Connect with us

Cinemapettai

பிக்பாஸ் ரசிகர்களை காண்டுடேற்றிய ஷிவானியின் அம்மா.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

shivani-bigg-boss

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் ரசிகர்களை காண்டுடேற்றிய ஷிவானியின் அம்மா.. கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியில் 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

இந்த சூழலில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டிகள் விறுவிறுப்பாக செல்லும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், போன சீசனில் அரங்கேற்றிய அதே டாஸ்க்கை மீண்டும் இந்த சீசனிலும் கொண்டு வந்தது ரசிகர்களை பெரும் ஏமாற்றம் அடைய செய்தது.

அதிலும் குறிப்பாக, நேற்று நடந்த ஃப்ரீஸ் டாஸ்கில் ஷிவானியின் அம்மா, போன சீஸனில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் அப்பாவை போலவே ஒரே மாதிரி கேள்விகளை கேட்டு ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளார்.

bb4-cinemapettai

மேலும் ‘காப்பி அடிக்கிறதுக்கு ஒரு அளவில்லையா?’,  ‘சிவானி மம்மி அப்படியே உங்க பொண்ணு கையோட கூட்டிட்டு போய்டுங்க!’ என்று சமூக வலைதளங்களில் தங்கள் கமெண்ட்களால் நெட்டிசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்க விடுகின்றனர்.

bb4-shivani-cinemapettai

அதுமட்டுமில்லாமல் சிவானி அவருடைய அம்மாவை கட்டிப்பிடித்து அழுதபோது, அதைப் பார்த்து சிரித்த ரம்யாவை பார்த்த, பிக்பாஸ் ரசிகர்கள் ‘யார் அழுதாலும் சிரிக்கிறதே ரம்யாவுக்கு வேலையா போச்சு!’ என்று கழுவி ஊற்றினார்.

எனவே நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏமாற்றம் அடைந்த, பிக்பாஸ் ரசிகர்கள் தங்கள் கோபத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top